×

இசைக்குதான் முதல் முக்கியத்துவம்..! ஹிப் ஹாப் தமிழா ஆதி

ஹிப் ஆப் தமிழா ஆதி, ஐஸ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிகுமார் நடிக்கும் படம் நான் சிரித்தால். சுந்தர்.சி. தயாரித்துள்ளார். வருகிற 14ம் தேதி வெளிவருகிறது. படம் பற்றி ஆதி கூறியதாவது: எனது நண்பர் ராணா இயக்கிய கெக்கே பிக்கே என்ற குறும்படம்தான் நான் சிரித்தால் என்ற பெயரில் படமாகியிருக்கிறது.

ரொம்ப சீரியசான ஒரு இளைஞனுக்கு எதற்கெடுத்தாலும் வாய்விட்டு சிரிக்கிற ஒரு விநோத வியாதி வந்தால் அவன் என்ன மாதிரியான பிரச்னைகளை சந்திப்பான் என்பதுதான் படத்தின் கதை. எந்தெந்த காட்சிக்கு எப்படி சிரிக்க வேண்டும் என்று பல மாதங்கள் பயிற்சி எடுத்து நடித்துள்ளேன். முள்ளின் மீது நடக்கிற மாதிரியான கேரக்டர்.

அதை உணர்ந்து நடித்திருக்கிறேன். வெறும் காமெடி படமாக இல்லாமல் சின்னதாக ஒரு மெசேஜும் சொல்லும் படம். கே.எஸ்.ரவிகுமார் வில்லனாக நடித்திருக்கிறார். நடித்துக் ெகாண்டிருந்தாலும் இசைதான் என் அடையாளம். அதற்குத்தான் முதல் முக்கியத்துவம் தருவேன் என்றார்.

Tags :
× RELATED டபுள் ஐஸ்மார்ட் டீசர் வெளியானது